எம்.வி.ஆர் மருத்துவமையம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

எம்.வி.ஆர் மருத்துவ மையம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை கீழ்கூத்தாப்பாக்கம் அரசு பள்ளியில் நடத்தியது.
புதுவை அருகே கீழ்கூத்தாப்பாக்கம் கிராமத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் எம்.வி.ஆர். மருத்துவ மைய இயக்குனர் டாக்டர்‌.எம்.ஆர். வித்யா தலைமையில் மருத்துவ குழுவினர் பங்கேற்ற காட்சி.
புதுவை அருகே கீழ்கூத்தாப்பாக்கம் கிராமத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் எம்.வி.ஆர். மருத்துவ மைய இயக்குனர் டாக்டர்‌.எம்.ஆர். வித்யா தலைமையில் மருத்துவ குழுவினர் பங்கேற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை அருகே கீழ்கூத்தாப்பாக்கம் தென்னகரம் ஊராட்சி மன்றம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை எம்.வி.ஆர் மருத்துவ மையம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை கீழ்கூத்தாப்பாக்கம் அரசு பள்ளியில் நடத்தியது.

மருத்துவ முகாமில், புதுவை பிரபல முதுநிலை பொது மருத்துவம் மற்றும் நீரழிவு நோய் நிபுணர் டாக்டர். எம்.ஆர். வித்யா தலைமையில் மருத்துவ குழுவினர் பங்கேற்று முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பொதுநல மருத்துவம், நீரழிவு நோய்க்கான சிறப்பு ஆலோசனை, குழந்தைகள் நல சிகிச்சை ஆலோசனை, சிறுநீர் மற்றும் சிறுநீர் பாதை பிரச்சனைகளுக்கான ஆலோசனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., எலும்பு அடர்த்திக்கான ஸ்கேன் பரிசோதனை, சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்பு பரிசோதனை, உடல் எடை உணவியல் நிபுணர்களின் ஆலோசனை, பிசியோதெரபி ஆலோசனை வழங்கினர்.

மேலும் டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

முகாம் ஏற்பாட்டினை எம்.வி.ஆர். மருத்துவ மைய மேலாளர் தாஸ், ஊழியர்கள், கூத்தாப்பாக்கம் வக்கீல் வீரபத்திரன் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com