கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் டிரைவர் தற்கொலை

8 மாத குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது அவரது மனைவி இறந்து விட்டார். தங்கராஜ் தங்குவதற்கு வில்லியனூரில் சிவக்குமார் அறை எடுத்து கொடுத்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சத்தியவதி கிராமம் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தங்கராஜ் (வயது 32). ஜே.சி.பி. டிரைவர். இவருடைய மனைவி கர்ப்பிணியாக இருந்தார்.

8 மாத குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது அவரது மனைவி இறந்து விட்டார். இந்த துக்கம் தாங்காமல் புதுவைக்கு வந்த தங்கராஜ் வில்லியனூர் அருகே உள்ள சிவக்குமார் என்பவருடைய பொக்லைன் எந்திரத்தை ஒட்டி வந்தார். தங்கராஜ் தங்குவதற்கு வில்லியனூரில் சிவக்குமார் அறை எடுத்து கொடுத்தார்.

அங்கு தங்கியிருந்த தங்கராஜ் அவரது மனைவியின் துப்பட்டாவால் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தங்கராஜ் சகோதரர் மைக்கேல்ராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் ஜே.சி.பி. டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com