வெள்ளம் புகுந்த பகுதிகளில் மழை நீர் வெளியேற்றம்-எதிர்கட்சி தலைவர் சிவா நடவடிக்கை

அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுத்தார்.உதவி பொறியாளர் சத்திய நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்ட காட்சி.
தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புயல்மழை காரணமாக வில்லியனூர் பாண்டியன் நகர், ஓம்சக்தி நகர், மூர்த்தி நகர், பட்டானிக்களம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதனை அறிந்த எதிர்க்கட்சி தலைவருமான. சிவா நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுத்தார்.

ஆய்வின்போது வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், செயற்பொறி யாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர் சத்திய நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com