தி.மு.க. கிளைத் தேர்தலுக்கு மனு தாக்கல்

புதுவை மாநில தி.மு.க. 15 வது பொது தேர்தல் வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.ஊர்கிளை நிர்வாகி தேர்தலில் சென்னை திரு.வி.க நகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
ஊசுடு தொகுதி 32 கிளைகளில் போட்டியிடுபவர்கள் பட்டியலை சிவா எம்.எல்.ஏ., தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் தேர்தல் பொறுப்பாளர்கள் வழங்கிய காட்சி.
ஊசுடு தொகுதி 32 கிளைகளில் போட்டியிடுபவர்கள் பட்டியலை சிவா எம்.எல்.ஏ., தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் தேர்தல் பொறுப்பாளர்கள் வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. 15 வது பொது தேர்தல் வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பல்வேறு தொகுதிகளுக்கு நடந்த ஊர்கிளை தேர்தலில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

ஊர்கிளை நிர்வாகி தேர்தலில் சென்னை திரு.வி.க நகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

ஊசுடு தொகுதியில் 32 ஊர்க்கிளை மற்றும் உட்கிளையில் ஒவ்வொரு கிளைக்கும் அவைத்தலைவர், கிளை செயலாளர், பொருளாளர் 3 துணை செயலாளர்கள், 2 பிரதிநிதிகள், 6 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான போட்டியிடுபவர்கள் பட்டியலை புதுவை மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தேர்தல் மேற்பார்வையாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் ஊசுடு தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் லோகையன், மதிவாணன், அரிதாஸ் ஆகியோர் வழங்கினர்.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் இளஞ்செழிய பாண்டியன், உத்திராபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com