Puducherry Assembly Election| பாகூரில் வாக்காளர்களுக்கு பரிசு டோக்கன் விநியோகம்

பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கிருந்தவர்களை கலைந்து போக செய்தனர்.
Puducherry Assembly Election| பாகூரில் வாக்காளர்களுக்கு பரிசு டோக்கன் விநியோகம்
Published on

புதுச்சேரி மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த நிலையில் பாகூரில் சிலர், வாக்காளர்களுக்கு பரிசு டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு ரொக்கப் பரிசு, மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாக்கு பதிவுக்கு பின்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இதை பார்த்த திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆதரவாளர்கள் டோக்கன் விநியோகத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்ற போது, சாலையில் வீசி எறிந்து விட்டு தப்பியோடினர்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன், பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கிருந்தவர்களை கலைந்து போக செய்தனர். பின்பு ரோட்டில் வீசப்பட்ட பரிசு கூப்பனை எடுத்து சென்றனர்.

தொடர்ந்து பாகூர் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதம் இதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com