அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடைபெற்றது அங்கன்வா டியை புரணமித்தல், மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட ஏற்பாடு.
 அனிபால் கென்னடி எம்.எல்.ஏ ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
 அனிபால் கென்னடி எம்.எல்.ஏ ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுடன் தி.மு.க. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தொகுதிக்குட்பட்ட அங்கன்வாடி பணியா ளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். அங்கன்வா டியை புரணமித்தல், மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட ஏற்பாடு செய்து கொடுத்தல், கழிவறை வசதி அனைத்தையும் மிக சுகாதார முறையில் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.

உடன் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தி.மு.க. மூத்த நிர்வாகி ரவி, தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, துணைத் தொகுதி செயலாளர் ராஜி, மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர் செல்வம் மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com