கிறிஸ்துமஸ் விழா

புதுவை கவுண்டன் பாளையத்தில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாண வர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி கிறிஸ்து பிறப்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்ட காட்சி.
முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை கவுண்டன் பாளையத்தில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தாகூர் நகர் பரிசுத்த ஆவி ஆலயத்தின் நிர்வாக தந்தை ஜான்சன் கலந்து கொண்டு பள்ளியில் புதிதாக செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலை ஆசீர்வதித்து மாணவர்க ளுக்கு கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாண வர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி கிறிஸ்து பிறப்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com