ஸ்கூட்டரில் சென்ற நர்சிடம் செயின் பறிப்பு

தனியார் மருத்துவ மனையில் பகலிலும், கடற்கரை சாலையில் தனியார் நர்சிங் ஹோமில் இரவிலும் நர்சாக வேலை செய்து வருகிறார்.போலீசார் வழக்குப் பதிந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் லெனின் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராஜேஸ்வரி (35).

கருத்துவேறுபாடு காரண மாக ராஜேஸ்வரி கணவரை பிரிந்து 9 ஆண்டாக தனியாக வசித்து வருகிறார். டிப்ளமோ நர்சிங் முடித்துள்ள ராஜேஸ்வரி, புதுவை சின்னமணிக்கூண்டு அருகில் தனியார் மருத்துவ மனையில் பகலிலும், கடற்கரை சாலையில் தனியார் நர்சிங் ஹோமில் இரவிலும் நர்சாக வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு 7.50 மணியளவில் காந்திவீதி வழியாக கடற்கரை சாலையில் உள்ள நர்சிங் ஹோமிற்கு ஸ்கூட்ட ரில் சென்று கொண்டி ருந்தார்.

அப்பகுதியில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே வலதுபக்கம் ஒரே பைக்கில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். பின்னால் வந்த நபர் திடீரென ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தார்.

திடுக்கிட்ட ராஜேஸ்வரி, செயினை கையால் கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனாலும்

பைக்கில் வந்த வர்கள் வேகமாக இழுத்த தில் செயின் இரண்டாக அறுந்தது. 6 தங்க காசுடன் ஒரு பகுதி செயினை திருடர்கள் பறித்து சென்று விட்டனர். பறிபோன 3½ பவுன் செயினின் மதிப்பு ரூ.1.½ லட்சமாகும்.

இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com