அரியாங்குப்பத்தில் நலதிட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்

மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.வார்டு செயலாளர்கள் ஜெயக்குமார், பாலு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநில செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட காட்சி.
மாநில செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க சார்பில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் எதிரில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில பொரு ளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் அன்பானந்தம், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலத் துணைச் செயலாளர் நாகமணி, பொதுக்குழு உறுப்பினர் பாலன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் வேந்தன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், , தொகுதி அவைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் ஜெயக்குமார், பாலு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொகுதி செயலாளர் ராஜா, ஜீவா ஏற்பாடு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com