பழங்குடியினருடன் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

புதுவை பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள இருளர் மற்றும் பழங்குடியினருடன் நடந்தது.பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.
பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பழங்குடியினர் மக்களுக்கு சர்க்கரை வழங்கும் காட்சி.
பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பழங்குடியினர் மக்களுக்கு சர்க்கரை வழங்கும் காட்சி.
Published on

புதுச்சேரி:

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவின் வெற்றி கொண்டாட்டம் புதுவை பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள இருளர் மற்றும் பழங்குடியினருடன் நடந்தது. பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளராக மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டார். அப்போது 150 குடும்பங்களுக்கு பட்டியல் அணி சார்பில் சர்க்கரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை த்தலைவர் செல்வம், செயலாளர்ரத்தினவேலு, அலுவலக செயலாளர் மகேஷ்ரெட்டி, தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர்

பாரதி மோகன், காலாப்பட்டு தொகுதி தலைவர் பிரகாஷ், பொதுச்செயலாளர் குணசீலன், துணைத்தலைவர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com