அங்கன்வாடி மையத்தில் குளியல் அறை வசதி

அங்கன்வாடி மையத்திற்கு குளியல் அறையுடன் கழிப்பிட வசதி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.ரோட்டரி கிளப் தலைவர் அனிபால் நேருவிடம் கென்னடி எம்.எல்.ஏ. வசதிகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.
அங்கன்வாடி மையத்தில் குளியல் அறை வசதியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
அங்கன்வாடி மையத்தில் குளியல் அறை வசதியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்தாய் நகரில் உள்ள கருமகாரிய கொட்டகை மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு குளியல் அறையுடன் கழிப்பிட வசதி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

இதையடுத்து தனது சகோதரரான ரோட்டரி கிளப் தலைவர் அனிபால் நேருவிடம் கென்னடி எம்.எல்.ஏ. வசதிகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ரோட்டரி கிளப் மூலம் கரும காரிய கொட்டகையிலும், அங்கன்வாடி மையத்திலும் குளியல் அறையுடன் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது.

இப்பணிகள் முடிவடைந்த நிலையில் இதனை கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் அனிபால் நேரு, சீனிவாசன், முருகேசன், பிரேம்ராஜா, தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.மு.க. பிரமுகர்கள் நோயல், கண்ணன், கண்ணையன், பியர், செழியன், மனேஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com