தெருவோர வியாபாரிகள் 25 பேருக்கு வங்கிக் கடன்

தட்டாஞ்சாவடி தொகுதி பொய்யாகுளம் பகுதியில் நடந்தது.நிதி உதவி பெற்று தரக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர்.
பயனாளிகளுக்கு வங்கிக் கடன் அனுமதிகடிதத்தை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வழங்கிய காட்சி.
பயனாளிகளுக்கு வங்கிக் கடன் அனுமதிகடிதத்தை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் பஸ்தி சம்பர்க் அபியான் நிகழ்ச்சி தட்டாஞ்சாவடி தொகுதி பொய்யாகுளம் பகுதியில் நடந்தது.

இந்நிகழ்ச்சியின் போது அப்பகுதி மக்கள் தாங்கள் செய்து வரும் வியாபாரத்திற்கு போதிய நிதி உதவி இன்றி சிரமப்படுவதாகவும், வியாபார அபிவிருத்திக்கு நிதி உதவி பெற்று தரக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர் .

இதனைத் தொடர்ந்து பட்டியல் அணியின் தீவிர முயற்சியில், தெருவோர வியாபாரிகள் 25 நபருக்கு பிரதமரின் ஸ்சுவநிதி திட்டத்தின் கீழ் வங்கி மூலம் நபர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பெற்றுத் தரப்பட்டது.

அதற்கான வங்கியின் அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.

பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெங்கடேசன் எம்.எல்.ஏ. மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் , விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், அலுவலக பொறுப்பாளர் மகேஷ், சிவபெருமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com