வாலிபர்களை தாக்கி கொலை மிரட்டல்

ஆத்திரம் அடைந்த அவர்கள் அலெக்ஸ், கோகுல் சரணை இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர்.மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக சென்றனர்.
மிரட்டல்
மிரட்டல்
Published on

புதுச்சேரி:

உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ( வயது 23). நெல்லிதோப்பில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார்.

 இவரும் அதே பகுதியை சேர்ந்த கோகுல் சரண் (18) என்பவரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அனிதாநகரில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் விற்பதற்காக மோட்டர் சைக்கிளில் சென்றனர்.அவர்கள் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இதை நோட்டமிட்ட அப்பகுதி வாலிபர்கள் அங்குள்ள ெரயில்வே கேட் பகுதியில் 2 பேரையும் வழிமறித்து எங்க ஏரியாவில் எப்படி அதிவேகமாக செல்லலாம் என்று கேட்டனர். இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது, ஆத்திரம் அடைந்த அவர்கள் அலெக்ஸ், கோகுல் சரணை இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com