அங்காளம்மன் கோவிலுக்கு திருப்பணிக்குழு நியமனம்

புதுவை சின்னசுப்பு ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.இதற்காக திருப்பணிக் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணை வெளியிட்டுள்ளது.
திருப்பணி குழுவினரிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன் அதற்கான ஆணையை வழங்கிய காட்சி.
திருப்பணி குழுவினரிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன் அதற்கான ஆணையை வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை சின்னசுப்பு ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற கோவிலுக்கு 2010-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 13 ஆண்டுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தவும், திருப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்தது.

இதற்காக திருப்பணிக் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

திருப்பணிக்குழு கவுரவ தலைவராக அமைச்சர் லட்சமிநாராயணன், தலைவராக ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பொரு ளாளராக நாக சீனுவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்களாக ராஜேந்தி ரன், சிவசுப்பிரமணியன், முத்துலி ங்கம், ஹேமா மாலினி, ஜெயக்குமார், நாகமுத்து, வேல்முருகன், ஜோதி லிங்கம், கலாவ திகுப்தா, ராமதாஸ், கோவிந்தராஜூலு ஆகியோர் நியமிக்க ப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com