புதுச்சேரியில் இருந்து மே 1-ந்தேதி முதல் கூடுதல் விமான சேவை

ராஜமுந்திரியில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் விமானம் ஐதராபாத்துக்கு காலை 11.15 மணிக்கு சென்றடைந்து அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மதியம் 1. 40 மணிக்கு வந்தடையும்.
புதுச்சேரியில் இருந்து மே 1-ந்தேதி முதல் கூடுதல் விமான சேவை
Published on

பெங்களூரூ - புதுச்சேரி - ஐதராபாத் மீண்டும் பெங்களூரு செல்லும் வகையில் இண்டிகோ நிறுவனம் சிறிய ரக விமானத்தை இயங்கி வந்தது.

இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் கூடுதல் விமான சேவையை வரும் மே 1ந்தேதி முதல் இயக்குகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரிக்கு இண்டிகோ புதிய விமான சேவைகளை வரும் மே 1ந் தேதி முதல் இயக்குகிறது. பெங்களூரில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 11.15க்கும் புதுச்சேரி வந்தடையும். அந்த விமானம் புதுச்சேரியில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு காலை 12.15 மணிக்கு சென்றடையும்.

ராஜமுந்திரியில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் விமானம் ஐதராபாத்துக்கு காலை 11.15 மணிக்கு சென்றடைந்து அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மதியம் 1. 40 மணிக்கு வந்தடையும்.

அந்த விமானம் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு மதியம் 3.15 மணிக்கு சென்றடையும். பெங்களூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மாலை 5.10 மணிக்கு வந்தடையும். புதுச்சேரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு ஐதாராபாத்தை இரவு 7.20 சென்றடையும். அங்கிருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு ராஜமுந்திரியை இரவு 9.05 சென்றடையும்.

புதிய விமான சேவையின் அறிமுகமானது பிராந்திய இணைப்பை மேம்படுத்தும். புதுச்சேரியில் இருந்து இதர நகரங்களுக்கு விமான பயணத்துக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும். விமான இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு புதுச்சேரி விமான நிலையம் துணைநிற்கும்.

இவ்வாறு ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com