இருவார தூய்மை திருவிழா

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்மாணவ- மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். அருகில் ஆணையர் ரமேஷ் உள்ளார்.
பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். அருகில் ஆணையர் ரமேஷ் உள்ளார்.
Published on

புதுச்சேரி:

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் இரு வார தூய்மை திருவிழா சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் அகிலன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர்.

நேஷனல் ஆங்கில மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

இந்த பேரணி தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையில் அருகில் இருந்து அபிஷேகப்பாக்கம் சாலை வரை நடந்தது.

இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனை டெங்கு நோடல் அதிகாரி செழியன் ஒருங்கிணைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com