மாநில அளவிலான பெத்தாங் போட்டி வெற்றி பெற்ற அணிக்கு கேடயம்

எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ராஜா நகர் பெத்தாங் கிளப்பில் நடைபெற்றது.
மாநில பெத்தாங் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு எதிர்கட்சி தலைவர் சிவா கேடயம் வழங்கிய காட்சி.
மாநில பெத்தாங் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு எதிர்கட்சி தலைவர் சிவா கேடயம் வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை நியூ பெத்தாங் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட அமித்தே பெத்தாங் விளையாட்டு கிளப் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி கடந்த 5-ந் தேதி உருளை யன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ராஜா நகரில் தொடங்கி நடந்தது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ராஜா நகர் பெத்தாங் கிளப்பில் நடைபெற்றது. கிளப் கவுரவத் தலைவர் முகிலன் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா பெத்தாங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல், வக்கீல் தாமோதரன், ஷண்முகா திரையரங்க உரிமையாளர் சுரேஷ், முத்தமிழ் நகர் ராஜா, இளங்கோ, சரவணன், மதனா, மாதவி கபாலன், கொல்மார் ரவிச்சந்திரன், சீனுவாசன், ரஜினீஷ் மற்றும் கிளப் நிர்வாகிகள் ரகு, பாஸ்கர் ஜான்சன், உதயசந்திரன், அருள், அரிவு டைநம்பி, அசோக்குமார், வேதக்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com