மது குடித்து விட்டு ரகளை செய்த 3 பேர் கைது

பொது இடத்தில் மது குடித்து விட்டு ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவை சாரம் மார்க்கெட்டில் உள்ள கழிவறை அருகே 3 வாலிபர்கள் மது குடித்து விட்டு மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களை அருவ ருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

பொது இடத்தில் மது குடித்து விட்டு ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை சாரம் மார்க்கெட்டில் உள்ள கழிவறை அருகே 3 வாலிபர்கள் மது குடித்து விட்டு மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களை அருவ ருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் ரகளை செய்த 3 பேரும் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடி விட்டனர். விசாரணையில் பிடிப்பட்டவர் சாரம் வேலன் நகரை சேர்ந்த சத்திய மூர்த்தி(வயது19) மற்றும் தப்பியோடியவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாய் மற்றும் சக்தி நகரை சேர்ந்த பெரியசாமி என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபோல் புதுவை அண்ணாசாலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த கண்டக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சங்கர் என்ற பிரவீன்(25) என்பவரை ஒதியஞ்சாலை போலீசாரும், தென்னஞ்சாலை ரோட்டில் ஒரு டீக்கடை அருகே ரகளையில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளியை சேர்ந்த வெங்கடேசன்(38) என்பவரை உருளை யன்பேட்டை போலீசாரும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com