புதுவை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் 2 பேர் கைது

2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புதுவை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் 2 பேர் கைது
Published on

சேதராப்பட்டு:

புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் சையது அமீர். இவர் சம்பவத்தன்று சின்ன கோட்டை குப்பம் கறிக்கடை சந்தில் நடந்து சென்றார்.

அப்போது எதிரே வந்த 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அமீரிடமிருந்த பணத்தை பறித்துச்சென்ற அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து அமீரிடம் பணம் பறித்தவர்களை அடையாளம் காண அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டார்.

அதில் அமீரிடம் பணம் பறித்தவர்கள் சின்னக்கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற பிக்க்ஷா (வயது 22), ஆறுமுகம் (26) என்பது தெரிய வந்தது. ரவுடிகளான விஜி என்கிற பிக்க்ஷா மீது சின்னக்கோட்டகுப்பம் பகுதியில் 2021-ம் ஆண்டு நடந்த செல்வகுமார் கொலை வழக்கு, ஆறுமுகம் மீது அவரது அண்ணனையே கொலை செய்த வழக்கும் உள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com