மது குடித்து விட்டு ரகளை செய்த 2 பேர் கைது

மது குடித்து விட்டு அவ்வழியே செல்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மடக்கி பிடித்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

திருபுவனை அருகே மதகடிப்பட்டு தம்பி தோப்பு பகுதியில் நேற்று மாலை ஒரு வாலிபர் மது குடித்து விட்டு அவ்வழியே செல்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் ரெட்டியார் மில் தாமரைக்குளம் காலனியை சேர்ந்த அருணாச்சலம் (வயது25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.

இதுபோல் போல் சூரமங்கலம் சந்திப்பில் மது குடித்து விட்டு ரகளை செய்த விழுப்புரம் அருகே கொத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்த அருள்தீபன்(26) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com