சி.ஏ.ஏ.வுக்கு எதிராக புதுச்சேரியில் தீர்மானம்- மனித நேய மக்கள் கட்சி வரவேற்பு

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தீர்மானம் நிறைவேற்றியதற்கு மனித நேய மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா
Published on

சென்னை:

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கருப்பு சட்டமான குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) அதனுடன் இணைந்துள்ள கருப்புச் சட்டங்களான என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக புதுச்சேரி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக இருக்கும் என்.ஆர். காங்கிரசும், அ.தி.மு.க.வும் தீர்மானத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளன. இதன் மூலம் இந்தக் கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும் பா.ஜ.க.வுக்கு விசுவாசமாகவும் உள்ளதை வெளிப்படையாக அறிவித்துள்ளன.

ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் பரவாயில்லை எனக் கூறி தீர்மானத்தை உறுதியாக நிறைவேற்றிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை மனித நேய மக்கள் கட்சி சார்பில் மனதார பாராட்டுகிறேன். தொலைபேசி வாயிலாகவும் அவருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com