டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் நாராயணசாமி சந்திப்பு

புதுவை மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் நாராயணசாமி சந்திப்பு
Published on

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.

புதுவை மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தருமாறு பிரதமர் மோடியிடம் நாராயணசாமி வலியுறுத்தினார். பிரதமருடனான சந்திப்பு குறித்து முதல்-அமைச்சர் நாராயண சாமி கூறியதாவது:-

புதுவையில் திட்டமில்லா செலவுக்கு ரூ.1250 கோடி தேவைப்படுகிறது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தியதால் அதற்கான தொகையும் மத்திய அரசு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.

மேலும் சுற்றுலாத் திட்டங்கள், தொழிற்சாலைகள் கொண்டு வர மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினேன்.

பிரதமர் மோடியை புதுவைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இந்தியா வர உள்ளார். அவருடன் பிரதமரும் புதுவைக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com