ஊத்துக்கோட்டையில் ரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்பு

ஊத்துக்கோட்டையில் ஆன்மீக அரசியல் என்ன என்பதை புரிந்து கொண்டார்களா? என்று பொதுமக்களிடம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கருத்து கேட்டனர்.
ஊத்துக்கோட்டையில் ரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்பு
Published on

ஊத்துக்கோட்டை:

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து உள்ளார்.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் ரஜினி மக்கள் மன்ற எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தலைமை கழக நிர்வாகிகள் ஸ்ரீகாந்த், சாமுவேல் சச்சின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ரஜினி மக்கள் மன்றத்தை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சரியாக செயல்படாத எம்.எல்.ஏ.க்களை மூன்று ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்புவோம் என்று ரஜினிகாந்த அறிவித்துள்ளதை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஆன்மிக அரசியல் என்ன என்பதை புரிந்து கொண்டர்களா? என்று தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகளிடம் மற்றும் பொது மக்களிடம் கருத்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

இதேபோல் பொது மக்களின் குறைகள், அரசியல் பற்றிய ரஜினி மக்கள் மன்றத்தின் எண்ணம் பற்றியும் அதிரடியாக கருத்தை கேட்டனர். இதுபற்றி அவர்கள் தலைமைக்கு தெரிவிக்க உள்ளனர்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சசி, ஊத்துக்கோட்டை நகர செயலாளர் கிரிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com