ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி காட்டமான கேள்வி

நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் தத்தளிக்கும் போது மத்திய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயளாலர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியங்கா காந்தி மற்றும் பிரதம் மோடி
பிரியங்கா காந்தி மற்றும் பிரதம் மோடி
Published on

புதுடெல்லி:

பொருளாதர விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு ஏன் அமைதியாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயளாலர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியாவது: 

நாட்டில் செயல்படும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட அனைத்து தொழில் நிறுவனங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவற்றின் உற்பத்தியும் தேக்க நிலையில் உள்ளது. மேலும், நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். 

ஆனால் நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு பொறுப்பேற்க வேண்டிய மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மிகவும் அமைதியாக இருக்கிறது. இந்த அமைதி நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com