பிரியங்கா காந்தி இன்று ரேபரேலி பயணம்

ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) ரேபரேலி செல்கிறார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on

லக்னோ :

நாடு முழுவதும் உள்ள 7 ரெயில்பெட்டி தொழிற்சாலைகளையும், அதோடு இணைந்த பணிமனைகளையும் மத்திய அரசு தனியார் மயமாக்க முயற்சிப்பதாக கூறி, உத்தரபிரதேச மாநிலம் லால்கன்ஜ்ஜில் உள்ள எய்கார் ரெயில் பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் இடைக் கால தலைவர் சோனியாகாந்தியின் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

இதனையடுத்து ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) ரேபரேலி செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com