

பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த திருவேங்கடபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். கூலி தொழிலாளி. இன்று காலை அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதனால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பல்வேறு சான்றிதழ்களும் தீயில் எரிந்து நாசமானது.