‘பாக்சிங் டே’ டெஸ்டில் இடம் கிடைக்கும்: பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நம்பிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் தனக்கு இடம் கிடைக்கும் என ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘பாக்சிங் டே’ டெஸ்டில் இடம் கிடைக்கும்: பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நம்பிக்கை
Published on

4-வது போட்டி ‘பாக்சிங் டே’ என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் மெல்போர்னில் 26-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளிலும் 6 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கியது. 6-வது பேட்ஸ்மேனாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் இடம்பிடித்தார். இவர் முதல் இரண்டு டெஸ்டிலும் 14, 36, 12 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

பெர்த்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார். பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நான்காவது வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. பெர்த் டெஸ்டில் மிட்செல் மார்ஷ் 181 ரன்கள் குவித்தார்.

இதனால் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்பிற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ‘பாக்சிங் டே’ டெஸ்டில் தனக்கு இடம் கிடைக்கும் என ஹேண்ட்ஸ்காம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘‘தற்போதைய நிலையில் என்னுடைய பேட்டிங் மூலமாகவே எனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னுடைய ஆட்டம் குறித்து நான் கவலைப்படவில்லை. சிறப்பாக எப்படி விளையாட வேண்டும், கடினமான டெஸ்டில் எப்படி விளையாட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எந்த நேரத்திலும் அணிக்கு திரும்புவேன். அணிக்கு திரும்பி என்னால் ரன்கள் குவிக்க இயலும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com