பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பேரளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அகரதிருமாளம் வரகூர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 60) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து, அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பூந்தோட்டம் பள்ளிக்கூடத்தெருவில் ஒரு வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com