பாராளுமன்ற தேர்தல் - பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி

பீகாரில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு நாங்கள் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம் என காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #Congress #GrandAlliance
பாராளுமன்ற தேர்தல் - பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி
Published on

டெல்லி:

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவரது கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

இதற்கிடையே, மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மெகா கூட்டணியை காங்கிரஸ் கட்சி டெல்லியில் இன்று அறிவித்தது.

டெல்லியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ், ஆர்ஜேடி, சரத் யாதவ், உபேந்திர குஷ்வாகா, ஜித்தன்ராம் மஞ்சி  உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இங்கு வந்து தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளனர் என தெரிவித்தார்.

ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாகா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது. #Congress #GrandAlliance

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com