கட்டாய திருமணத்தால் கணவன் உட்பட 13 பேருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்

பாகிஸ்தானில் கட்டாய திருமணத்தால் கணவன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விஷம் கொடுத்து மனைவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாய திருமணத்தால் கணவன் உட்பட 13 பேருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்
Published on

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசியா பிபி என்ற பெண்ணிற்கு கடந்த செப்டம்பர் மாதம் அவளது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். அசியா ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அசியா தனது காதலன் மற்றும் அவனின் உறவுக்காரப் பெண்ணுடன் இணைந்து கணவரை கொலை செய்ய திட்டம் மிட்டுள்ளார். கணவருக்கு கொடுக்க இருந்த பாலில் விஷம் கலந்தார். ஆனால் அதை அவர் குடிக்கவில்லை. தவறுதலாக அந்த பாலை லசி எனப்படும் பானத்தில் கலந்து விட்டனர். அதனை வீட்டிலிருந்த அனைவரும் பருகினர்.

லசியை பருகியதால் கணவர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அசியா அவரது காதலன் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த காதலனின் உறவுக்காரப் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் மனைவியே கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com