பாகிஸ்தானில் இரு தற்கொலைப்படையினரை ராணுவம் சுட்டுக் கொன்றது

ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவந்த இரு தலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று சுட்டுக் கொன்றனர். #pakistan #Talibansuicidebombers
பாகிஸ்தானில் இரு தற்கொலைப்படையினரை ராணுவம் சுட்டுக் கொன்றது
Published on

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையயொட்டி அந்நாட்டின் மத்திய அரசின் ஆளுமைக்குட்பட்ட பஜவுர் என்ற பகுதி உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து எல்லையை கடந்துவந்த இரு தலிபான் தீவிரவாதிகள் கைபர் பக்துங்வா பகுதியில் மனிதகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற இருவரை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோது  அவர்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.

அவர்கள் வைத்திருந்த வெடிகுண்டுகளுடன் கூடிய தற்கொலைப்படை ஆடைகள், கன்னி வெடிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #tamilnews #pakistan #Talibansuicidebombers

X

Maalai Malar
www.maalaimalar.com