

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பழையூரை சேர்ந்தவர் சின்னப்ப உடையார். 107 வயதான இவர், சிறுமலை பழையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக தனது உறவினர் ஒருவருடன் நேற்று வந்தார்.அதன் பின்னர் வாக்குச்சாவடி மையத்தில், பூத் சிலிப் மற்றும் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.
இதுகுறித்து சின்னப்ப உடையார் கூறும்போது, நேரம் தவறாமல் அளவான சாப்பாடு சாப்பிட வேண்டும். நிறைவான தூக்கம், உறவினர்களின் அன்பான கவனிப்பு ஆகியவற்றால் இன்னும் இளைஞர் போல் வாழ்ந்து வருகின்றேன். அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திப்பேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.