

சென்னை:
தமிழகத்தில் கோடை மழை சில இடங்களில் பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி முடிய (4 நாட்கள்) கோடை மழை, சில இடங்களில் இடியுடன் பெய்ய உள்ளது. அதற்கு பிறகு பெய்யுமா? என்பதை அதற்கு பிறகுதான் தெரிவிக்க முடியும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர மழை அளவு வருமாறு:-
உசிலம்பட்டி, தக்கலை, கடலாடி தலா 2 செ.மீ., பவானி, நிலக்கோட்டை, மானாமதுரை, ஈரோடு, பெரியகுளம் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.