நியூயார்க் டிரக் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

நியூயார்க்கில் கடந்த 31-ந்தேதி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ‘டிரக்’ தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நியூயார்க் டிரக் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு
Published on

மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்த திடீர் தாக்குதலில் 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தின்போது ரோந்து சென்று கொண்டிருந்த போலீசார் அந்த மர்ம நபரை சுட்டுப் பிடித்தனர். அதன்பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளரான சாய்ஃபுல்லோ சாய்போவ் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ‘‘ஐ.எஸ். தீவரவாத அமைப்பின் ஒரு வீரர் நியூயார்க்கில் இந்த தாக்குதலை நடத்தினார்’’ என்று அந்த அமைப்பின் அல்-நபா என்ற வார பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com