புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1 மணி வரை ரெயில்கள் இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம்

புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1 மணி வரை ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ
மெட்ரோ
Published on

சென்னை:

சென்னையில் புத்தாண்டு தினத்தை கொண்டாடடுவதற்காக மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை, தனியார் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த அனுமதி இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை இரவு 9 மணி முதல் மயிலாப்பூர், அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சுமார் 368 வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

தற்போது மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நாளை இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com