

சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. பணிகள் நிறைவடைந்த வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நேருபூங்கா- கோயம்பேடு- பரங்கி மலை, சின்னமலை- விமானநிலையம் இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அண்ணாசாலையில் டி.எம்.எஸ்.- சைதாப்பேட்டை இடையே சுரங்க ரெயில்பாதை பணிகள் நிறைவடைந்துவிட்டன.
இதேபோல் நேருபூங்கா- சென்ட்ரல் இடையேயான சுரங்க ரெயில் பாதை பணியும் முடிந்துவிட்டன.
இந்த இரு வழித்தடத்திலும் வருகிற மார்ச் மாதம் ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளனர். விரைவில் சோதனை ஓட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்ட்ரல்-நேருபூங்கா இணைப்பின் மூலம் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு மற்றும் விமான நிலையத்துக்கு விரைவாக செல்லமுடியும். #Tamilnews