நெகமம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

நெகமம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெகமம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
Published on

நெகமம்:

நெகமம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெகமம் என்.சந்திரபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியனை (வயது 66) கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கோவை வெள்ளலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த, அதேபகுதி கோன வாய்க்கால் பாளையம் போயர் தெருவை சேர்ந்த டேவிட் ராஜாவை (வயது 23) போதனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com