'மாணவர்களின் கூக்குரல்'! போராட்டத்தை தொடங்கிய ராகுல் காந்தி

மாணவர்களின் குறைகளை தேசிய அளவில் பெரிதுபடுத்தும் நாடு தழுவிய போராடத்தை ராகுல் காந்தி தொடங்கிவைத்தார்.
Rahul Gandhi
Published on

வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகள், உயர்ந்து வரும் கட்டணங்கள் மற்றும் வேலையின்மை ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்து, ராகுல் காந்தி ராஜஸ்தான்
கோட்டாவில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் கூக்குரல்) போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கவலைகளை முன்னிலைப்படுத்துவதற்காக, பல்வேறு நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ள மாணவர் மாநாடுகளின் வரிசையில் கோட்டா நிகழ்வு முதலாவதாகும்.

கோட்டாவில் தொடங்கி நாடு தழுவிய மாணவர்களுடன் தொடர்புகொண்டு இளைஞர்களின் குறைகளை தேசிய அளவில் பெரிதுபடுத்துவதை காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னதாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட எண்ணற்ற அநீதிகளைப் பற்றி ராகுல் விரிவாகப் பேசினார். குறிப்பாக மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட செலவினத்திற்கும், பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கல்விக்காகச் செலவிடும் தொகைக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டினார்.

கல்வியை வலுப்படுத்தவும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் முன்மொழிவுகளுடன் விமர்சனங்களையும் இணைக்கப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் கவலைகளை ராகுல்காந்தி அரசியல்மயமாக்குவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்தப் பயணத்தை 'அரசியல் சுற்றுலா' மற்றும் 'அரசியல் நாடகம்' என்று பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.

நீட்-யுஜி மறுதேர்வுக்கு வெறும் 72 மணி நேரத்திற்கு முன்பு இதை நடத்துவதற்கான காரணத்தை கேள்வியாக எழுப்பியதுடன், இது தேர்வர்களின் கவனத்தை சிதறடிக்கக்கூடும் என்றும் விமர்சித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com