அமெரிக்காவில் மாரடைப்பால் உயிரிழந்த 26 வயது இந்திய மாணவர்

பட்டமளிப்பு விழாவை முடித்த மறுநாள், தனது அறைக்கு தூங்க சென்ற மாணவர் படுக்கையிலேயே உயிரிழப்பு
அமெரிக்காவில் மாரடைப்பால் உயிரிழந்த 26 வயது இந்திய மாணவர்
Published on

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில் வசித்து வந்த ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 26 வயதுடைய முகமது குமேல் சேக் என்ற மாணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த மாணவர் சேக், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டத்தைப் பெற்றுக்கொண்ட அடுத்த நாளில், தனது அறையில் இரவு தூங்கும்பொழுது படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்து, மேற்கல்வி பயில்வதற்காக சென்ற இளைஞன், தனது வாழ்வின் மிக முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டிய உடனே இயற்கை எய்தியுள்ள சம்பவம், மருத்துவ ரீதியான விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் இறந்த மாணவரின் உடலை தாயகத்திற்குத் திரும்பக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மற்றும் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டும் பணிகளில் அங்கிருக்கும் தன்னார்வ அமைப்புகளும் இந்தியத் தூதரகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com