வித்தியாசமான 'ஹெல்மெட்' அணிந்து வைரலான இளம்பெண்

அவ்னீஷ் மிஸ்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.வீடியோவை பார்த்த பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வித்தியாசமான 'ஹெல்மெட்' அணிந்து வைரலான இளம்பெண்
Published on

நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சில வாகன ஓட்டிகள் சாலையில் வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து செல்வது சமூக வலைதளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் இளைஞர்கள் முயல் வடிவ ஹெல்மெட் அணிந்து சென்ற காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் பரவி இருந்தது.

இந்நிலையில் தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கான்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அணிந்துள்ள வித்தியாசமான ஹெல்மெட் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவ்னீஷ் மிஸ்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.

அதில், சாலையில் செல்லும் அந்த இளம்பெண் அணிந்திருந்த ஹெல்மெட்டை கூர்ந்து கவனிக்கும் போது அந்த ஹெல்மெட் அவரது தலையை முழுங்குவது போன்று இருக்கிறது. தலை முழுவதும் மூடிய நிலையில் சிறிய இடைவெளி கூட இல்லாமல் காணப்படும் அந்த பெண்ணின் வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

வீடியோவை பார்த்த பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com