பாராளுமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு

போராட்டத்தில் விவசாயிகளும் இணையப்போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் விவசாய சங்கத்தினர் அம்பாலா எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு
Published on
<p>தடுத்து நிறுத்தப்பட்ட விவசாய சங்கத்தினர்</p>

புதுடெல்லி:

டெல்லியில் புதிய பாராளுமன்ற திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. பாராளுமன்ற கட்டிட கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்ததுடன், மக்களவையில் செங்கோலை நிறுவினார். இன்று பிற்பகல் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கக்கூடாது, சாவர்க்கரின் பிறந்தநாளில் திறப்பது சரியல்ல.. என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடக்கிறது.

இது ஒருபுறமிருக்க, போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கிராம தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இணையப்போவதாக கூறி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே டெல்லயில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைப்பகுதியான திக்ரி எல்லை, சிங்கு எல்லை பகுதி அருகே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி நோக்கி வந்த பஞ்சாப் விவசாய சங்கத்தினர் அம்பாலா எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பாராளுமன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பேரிகார்டுகள் வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னச்சரிக்கை நடவடிக்கையாக பாராளுமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com