தெலுங்கானாவில் உள்ள ஆந்திர மாநில பிரபலங்களின் சிலைகளை உடைத்து திருப்பி அனுப்புவோம்: டி.ஆர்.எஸ். கவிதா ஆவேசம்

தெலுங்கானா விவகாரத்தில் அண்டை மாநிலமான ஆந்திராவின் அரசியல் தலைவர்கள் தலையிட முயற்சி செய்து வருவதாக கவிதா குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள ஆந்திர மாநில பிரபலங்களின் சிலைகளை உடைத்து திருப்பி அனுப்புவோம்: டி.ஆர்.எஸ். கவிதா ஆவேசம்
கே கவிதா
Published on

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த தின நிகழ்ச்சியில் பேசிய டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே. கவிதா ஆட்சியிலும், கலாச்சாரத் துறையிலும் எந்தவொரு தலையீட்டையும் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்றார்.

இது தொடர்பாக கே. கவிதாக கூறியதாவது:-

தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஐதராபாத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ள ஆந்திரா பிரபலங்களின் சிலைகளை, நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு உடைத்தெறிவோம். ஆந்திரப் பிரதேச அரசியல் தலைவர்கள் தெலுங்கானா மக்களை இழிவுபடுத்தக் கூடாது. தெலுங்கானா மீது கலாச்சார ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலக் கூடாது.

இங்கே (தெலுங்கானாவில்) அவர்களுடைய முகவரே முதலமைச்சராக (ரேவந்த் ரெட்டி) இருப்பதால் இத்தகைய சேதம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் விதவிதமான சிலைகளை நிறுவி வருகிறார்கள். நான் முன்பே கூறியிருக்கிறேன், கடந்த காலத் தலைவர்களைப் போல நான் அவ்வளவு நல்லவர் அல்ல. நாங்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம். நீங்கள் இதேபோன்று தொடர்ந்து செயல்பட்டால், நாங்கள் அந்தச் சிலைகள் அனைத்தையும் உடைத்து, பார்சல் மூலம் ஆந்திராவிற்கு அனுப்பிவிடுவோம். எனக்கு அவ்வளவு பொறுமையோ, பரந்த மனப்பான்மையோ கிடையாது.

எங்கள் பிரச்சனை அவர்களுடன் (முதலீட்டாளர்களுடன்) அல்ல. செயலக விவகாரங்களில் தாங்கள் தலையிடுவோம் என்று ஆந்திர அரசியல் தலைவர்கள் கூறினால், எங்கள் பிரச்சனை அவர்களுடன்தான்.

இவ்வாறு கே. கவிதா தெரிவித்தார்.

சமீபத்தில் ஆந்திர மாநில முதல்வராக என்.டி. ராமராவ் சிலை ஐதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com