இரவோடு இரவாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அமல் - விவாதத்துக்கு மத்தியில் மத்திய அரசு அறிவிப்பு!

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது.
இரவோடு இரவாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அமல் - விவாதத்துக்கு மத்தியில் மத்திய அரசு அறிவிப்பு!
Published on

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது.

இந்த சூழலில் நேற்று இரவு முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

சட்டம் நிறைவேற்றப்பட்டு ஏறத்தாழ, 30 மாதங்களுக்கு பிறகு சட்டம் அமலாவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த சட்டத்தை 2029 முதல் நடைமுறைக்கு கொண்டு வர தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 சட்டத் திருத்த மசோதாக்கள் நேற்று தொடங்கிய 3 நாள் சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வரும் சூழலில் இன்று மாலை வாக்கெடுப்பு நடக்கிறது.

ஒரு சட்டத்தைத் திருத்துவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, அச்சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவது நடைமுறை சார்ந்த மற்றும் அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்புவதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

தற்போதைய அரசிதழ் அறிவிப்பின் மூலம், இந்தச் சட்டத்தை அரசு, முறையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

இருப்பினும், ஒதுக்கப்பட்ட இடங்களை நிர்ணயிக்கும் தொகுதி மறுவரையறைப் பணிகள் நிறைவடைந்த பின்னரே, இச்சட்டத்தை நடைமுறையில் முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்ற நிலை தொடர்கிறது.

ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கமான சட்ட நடைமுறைதான் இந்த அறிவிப்பு என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com