சத்தீஸ்கர்: என்கவுண்டரில் பெண் நக்சலைட் சுட்டுக்கொலை | Encounter

சத்தீஸ்கர் ஆயுதமேந்திய நக்சலைட் இல்லாத மாநிலமாக கடந்த மார்ச் 31-ந்தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சண்டை நடைபெற்றுள்ளது.
சத்தீஸ்கர்: என்கவுண்டரில் பெண் நக்சலைட் சுட்டுக்கொலை | Encounter
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பெண் நக்சலைட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கர் ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகளிடம் இருந்து விடுபட்டது என்று அரசு கடந்த மாதம் 31-ந்தேதி அறிவித்திருந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடைபெற்றுள்ளது.

கான்கேர மாவட்டத்தில் உள்ள சோட் பெத்தியா காவல்நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான ஆபரேசனில் ஈடுபட்டனர். அப்போது இந்த சண்டை நடைபெற்றுள்ளது.

உயிரிழந்த பெண் நக்சலைட்டின் பெயர் ரூபி என்றும், அவரது உடல் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்றும், சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com