

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஜோதி சிவாஜி (வயது 50) என்பவர் அறுவை சிகிச்சை பிரிவில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவர் அறுவை சிகிச்சை உபகரணங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் சரக்கு லிப்ட் நோக்கி வந்தார். லிப்ட் எங்கே உள்ளது என கீழ் நோக்கி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மேலிருந்து, கீழ் நோக்கி வந்த லிப்ட்டில் ஜோதி சிவாஜியின் தலை சிக்கி கொண்டது. இதனைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அவரை லிப்டிலிருந்து மீட்க நீண்ட நேரம் போராடினர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் லிப்டில் சிக்கி கொண்ட தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு லிட்டில் சிக்கிய ஜோதி சிவாஜியை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர். அவரது நரம்பு மற்றும் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் இறந்தார். ஜோதி சிவாஜியின் தலை லிப்டில் சிக்கிக் கொண்ட காட்சி அப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.