ரெயில்வே தடுப்பில் சிக்கிய காட்டு யானை நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு மீட்பு

வனத்துறை கால்நடை மருத்துவர்கள் யானைக்கு மயக்க மருந்து கொடுத்தனர்.
Elephant
ரெயில்வே தடுப்பில் சிக்கி காட்டு யானை போராடிய காட்சி.
Published on

கர்நாடக மாநிலம் ராம நகர் மாவட்டம் கனகபுரா தாலுகா காவேரி வனவிலங்கு சரணாலயம் பகுதியில் இருந்து உணவு தேடி ஒரு காட்டுயானை அரேகொப்பா என்ற கிராமத்துக்கு இரவு நேரத்தில் வந்தது. பின்னர் அங்கு கிடைத்த உணவுகளை சாப்பிட்ட காட்டு யானை மீண்டும் அதிகாலை வனப்பகுதிக்கு செல்ல முயன்றது.

தடுப்பில் சிக்கியது

அப்போது காவேரி வனவிலங்கு சரணாலயம் பகுதியில் இருந்த ரெயில்வே தடுப்பில் யானை சிக்கிக் கொண்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கியாஸ் கட்டர்களை பயன்படுத்தி தடுப்பை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இரும்பு வேலியை அகற்றுவதற்காக தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது வனத்துறை கால்நடை மருத்துவர்கள் யானைக்கு மயக்க மருந்து கொடுத்தனர்.

யானை

இதனால் ரெயில்வே இரும்பு தடுப்பு வெட்டும் போது யானை மயக்க நிலையிலேயே இருந்தது. தொடர்ந்து யானையை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வந்தனர். பின்னர் பல மணி நேர போராட்டத்துக்கு பின்பு இரும்பு தடுப்பு வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து மீண்டும் யானை வனப்பகுதிக்கு சென்றது. பல மணி நேரம் இரும்பு தடுப்பில் சிக்கிய நிலையிலும் யானைக்கு எந்த காயமும் ஏற்பட வில்லை. யானை இரும்பு தடுப்பில் சிக்கிக் கொண்டு நகரமுடியாமல் போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைல ராகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com