அம்மா வீட்டுக்கு சென்ற மனைவி.. ஆத்திரத்தில் 2 பேரையும் கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கமாறு மாமியாரிடம் கேட்டார்.தலைமறைவாக உள்ள சீதாராம ராஜுவை தேடி வருகின்றனர்.
அம்மா வீட்டுக்கு சென்ற மனைவி.. ஆத்திரத்தில் 2 பேரையும் கத்தியால் குத்திக் கொன்ற கணவன்
Published on

ஆந்திர மாநிலம்,கிழக்கு கோதாவரி மாவட்டம், பாபி லங்காவை சேர்ந்தவர் சீதாராமராஜு. இவரது மனைவி லதா.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் சீதாராமராஜு மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார்.

துன்புறுத்தல் காரணமாக லதா தனது தாய் லட்சுமி வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு மாமியார் வீட்டிற்கு சென்ற சீதாராம ராஜு மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கமாறு மாமியாரிடம் கேட்டார்.

அவர் தனது மகளை அனுப்பி வைக்க மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த சீதாராம ராஜு தான் தயாராக கொண்டு வந்த கத்தியை எடுத்து மனைவி மற்றும் மாமியாரை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த லதா மற்றும் லட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக இறந்தனர். இருவரையும் கொலை செய்த சீதாராமராஜு அங்கிருந்து தப்பி சென்றார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சீதாராம ராஜுவை தேடி வருகின்றனர். சீதாராம ராஜு ஏற்கனவே கொலை வழக்கு ஜெயிலுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com