

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
மத்தியப் படைகள் மற்றும் மாநில காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை எந்தவித பதற்றமோ அல்லது விரும்பத்தகாத சம்பவமோ இன்றி முடிவடைந்தது.
மாலை 6 மணி நிலவரப்படி, 15 வாக்குச்சாவடிகளிலும் ஏறக்குறைய 90 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
முன்னதாக கடந்த 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மேற்கு வங்கத்தில் நடந்த வாகுபதவில் சுதந்திரத்திற்குப் பிறகு புதிய சாதனையாக, சராசரியாக 93 சதவீத வாக்குப்பதிவு பதிவானது.
வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெற உள்ள நிலையில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திரிணாமூல் காங்கிரஸின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, பாஜக ஆட்சிக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.