

மேற்கு வங்கத்தில் நேற்று 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இதில் 92.28 என்ற சாதனை வாக்கு சதவீதம் பதிவானது.
இவிஎம்இயந்திர கோளாறு, இரு தரப்பு மோதல் உள்ளிட்டவற்றால் நேற்று அங்கு பல்வேறு வாக்குச் சாவடிகளில் பதற்றம் நிலவியது.
சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய படையினரின் பலத்த பாதுகாப்புடன் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த சூழலில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மத்திய படையினர் தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், உதயநாராயன்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மகனின் உதவியடன் வாக்கு செலுத்த வந்த முதியவரை மத்திய ஆயுதக் காவல் படை(CAPF) அதிகாரிகள் தாக்கி பலவந்தமாக பிடித்து தள்ளியதில் அவர் நிலைகுலைந்து விழுந்தார் என்றும் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
உயிரிழந்தவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் புகைப்படங்களை வெளியிட்ட அபிஷேக் பானர்ஜி, மத்திய படையினர் மாநிலம் முழுவதும் இதுபோல முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை குறிவைத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
நேற்று புழுத்து விடுத்ததில் இருந்து மத்திய படைகள் பொதுமக்களை அச்சுறுத்தியும், பெண்களை கன்னத்தில் அறைந்தும், முதியவர்களையும், ஏன் குழந்தைகளையும் கூட தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நிராயுதபாணியாக மக்கள் மீதான இதுபோன்ற ரத்த வெறி பிடித்த வன்முறை ஏற்கத்தக்கது அல்ல என்று சாடியுள்ளார்
வாக்குப்பதிவு முடிந்தும் கூட மேலும் 60 நாட்களுக்கு மாநிலத்தில் மத்திய படைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவையும் ஆர் விமர்சித்தார். வாக்குப்பதிவு முடிந்த ஒரு மாநிலத்தில் பல்வேறு படைகளை சேர்ந்த சுமார் 2.5 லட்சம் மத்திய படை வீரர்களை நிலைநிறுத்தி வைத்திருப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.