மேற்கு வங்க தேர்தல்: 3 மணி நிலவரப்படி 78.68% வாக்குகள் பதிவு

கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவீதம் என்ற சாதனை அளவிலான வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க தேர்தல்: 3 மணி நிலவரப்படி 78.68% வாக்குகள் பதிவு
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 142 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 3.22 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 61.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் இரண்டாம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவீதம் என்ற சாதனை அளவிலான வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com